ECONOMYSELANGOR

அடுக்குமாடி குடியிருப்பாளர்களின் பொருளாதார சுமையை குறைக்கும் திட்டம் பிகேபிஎஸ் மூலம் விரிவு படுத்தப்படுகிறது

ஷா ஆலம், செப்டம்பர் 12: சிலாங்கூர் நகர்ப்புற சமூகப் பொருளாதார அணிதிரட்டல் திட்டம் (மேகார்) சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்துடன் (பிகேபிஎஸ்) இணைந்து விரிவுபடுத்தப்படும் என்று நகர்ப்புற நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

அடுத்த வாரம் இவ்ஒத்துழைப்பு குறித்து தனது தரப்பு விவாதிக்கும் என்றும், விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

“டத்தோ மந்திரி புசார் அறிமுகப்படுத்திய பிகேபிஎஸ் மலிவான விற்பனைத் திட்டம் மிகவும் ஊக்கமளிக்கும் வரவேற்பைப் பெற்றிருப்பதை நாங்கள் காண்கிறோம்.

“எனவே, ஒவ்வொரு மேக்கர் திட்ட வளாகத்திற்கும் கோழி, முட்டை, எண்ணெய் மற்றும் பல பொருட்களை வழங்குவதற்கு நாங்கள் பிகேபிஎஸ் உடன் இணைந்து பணியாற்றுவோம்,” என்று அவர் இன்று மாநில அரசு நிர்வாக கட்டிடத்தில் சந்தித்தபோது கூறினார்.

சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட் வாரியம் மற்றும் சிலாங்கூர் கூட்டுறவு வார்கா ஹிஜ்ரா பெர்ஹாட் ஆகியவற்றால் செயல்படுத்தப்பட்ட மேக்கர் திட்டம் கடந்த ஏப்ரலில் தொடங்கப்பட்டதிலிருந்து குடியிருப்பாளர்கள் இடமிருந்து நல்ல வரவேற்பை  பெற்றதாக ரோட்சியா கூறினார்.

இதற்கு முன், தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு உதவும் நோக்கில் மேக்கர்  என்னும் முன்னோடித் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

திட்டத்தின் மூலம், ஒரு கியோஸ்க் அல்லது மினி மார்க்கெட் கட்டப்பட்டு, குறைந்த விலையில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து, மக்களின் பொருளாதார சுமையை எளிதாக்க திட்டமிட்டுள்ளது.

தாமான் டத்தோ ஹொர்மட்  மலிவு விலை குடியிருப்புகள், சிஜாங்காங்; தாமான் ராஜா உடா குறைந்த விலை குடியிருப்புகள், பாண்டமாறன்; ரிமாவ் இண்டா குடியிருப்பு, கோத்தா கெமுனிங் மற்றும் அங்கெரிக் மேனேஜ்மென்ட் கார்ப்பரேஷன் 26, பத்து தீகா ஆகியவை சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகும்.


Pengarang :