ECONOMYSELANGOR

திருமணமாகாதோர் மற்றும் புதிதாக திருமணம் செய்தோருக்காக சிறப்பு வீடமைப்புத் திட்டம்

கோல சிலாங்கூர் செப் 13- திருமணமாகதவர்கள் மற்றும் புதிதாக திருமணம் செய்து கொண்டவர்களுக்கு வாடகைக்கு விடுவதற்காக ஒன்று அல்லது இரண்டு அறைகள் கொண்ட வீடுகளை மாநில அரசு நிர்மாணிக்கவுள்ளது.

பெட்டாலிங் ஜெயா, அம்பாங், சுபாங் ஜெயா மற்றும் ஷா ஆலம்  ஆகிய இடங்களில் இந்த வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நிர்ணயிக்கப்பட்ட தகுதியைக் கொண்டிராதவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பதை தவிர்ப்பதற்காக மாநில அரசே இத்திட்டத்தை முழுமையாக கையாளும் என்று அவர் சொன்னார்.

சிக்கனம் என்ற பெயரில் ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தினர் இத்தகைய வீடுகளைப் பெற முயல்வதை தாங்கள் தடுக்க விரும்புகிறோம். இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் பெரிதும் பாதிக்கப்படும் என்றார் அவர்.

இந்த திட்டத்தில் கட்டப்படும் வீடுகளை திருமணமாகாதோர் மற்றும் திருமணமாகி ஒரு குழந்தையைக் கொண்டிருப்போர் பெறுவதை உறுதி செய்ய விரும்புகிறோம் என்று அவர் மேலும் சொன்னார்.

நேற்று இங்குள்ள தாமான் சுங்கை யூவில் மலிவு விலை வீடுகளை வாங்கிய 10 பேருக்கு சாவிகளை ஒப்படைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.


Pengarang :