ECONOMYSELANGOR

மாநில அரசின் மலிவு விற்பனை ஒன்பது இடங்களில் இன்று நடைபெறும்

ஷா ஆலம், செப் 20– மாநில அரசின் அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய மேலும் 9 இடங்களில் இன்று நடைபெறும்.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாடு செய்துள்ள இந்த மலிவு விற்பனை காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும்.

இந்த விற்பனையில் நடுத்தர கோழி  10.00 வெள்ளிக்கும் உறையவைக்கப்பட்ட இறைச்சி ஒரு பேக் 10.00 வெள்ளிக்கும் ‘பி’ கிரேடு முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் மீன் ஒரு பேக் 6.00 வெள்ளிக்கும் கிடைக்கும்.

மலிவு விற்பனை நடைபெறும் இடங்களின் பட்டியல் வருமாறு:

• சுங்கை ஆயர் தாவார் சமூக சேவை மைய மைதானம் (சபாக் பெர்ணம்)

• தாமான் அரோவானா பெர்டானா, சுங்கை பூரோங் (சபாக் பெர்ணம்)

• பாசிர் பாஞ்சாங் நகரம் (சபாக் பெர்ணம்)

• கம்போங் ஸ்ரீ திராம் ஜெயா பொது மண்டபம் (கோல சிலாங்கூர்)

• தாமான் நிர்வாணா பிளாட்ஸ் (உலு லங்காட்)

• பெர்மாய் ரியா பிளாட்ஸ், தெராத்தாய் (உலு லங்காட்)

• சுங்கை அல்-மன்சூரியா , செமினி (கோல லங்காட்)

•  நோவா கார் நிறுத்துமிடம், U5/M, கோத்தா டாமன்சாரா (பெட்டாலிங்)

• டேவான் டத்தோ ஹொர்மாட் கம்போங் ஸ்ரீ சீடிங் (கோல லங்காட்)

இந்த மலிவு விற்பனை குறித்த மேல் விபரங்களை https://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.


Pengarang :