ECONOMYSELANGOR

சமுக மேம்பாட்டுக்கு ஐ-சீட் உதவி –இளம் வணிகர் சாதனை கார்னிவல் கிள்ளான் செட்டி பாடாங்கில்

ஷா ஆலம்- செப் 21- கடந்த 2021ம் ஆண்டு தொடங்கி மாநிலம் முழுவதும் திறமையான ஆற்றல் மிக்க இளம் வணிகர்களை அடையாளங்கண்டு தொழில் துறைகளில்   ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாக சிலாங்கூர் மாநில அரசு ஐ- சீட் எனப்படும் சமுக மேம்பாட்டு திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

சிலாங்கூர் மந்திரி புசார்(கட்டமைப்பு) அல்லது எம்பிஐ, எம்பிகே, கேகேஐ மற்றும் கிள்ளான் லிட்டல் இந்தியா வணிகர்கள் இணைந்து ஏற்பாடு செய்யும் மெகா ஐ-சீட் கார்னிவல் நிகழ்ச்சி அக்டோபர் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பாடாங் செட்டியில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி நடைபெறும்.

இதனை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க, சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஐ-சீட் துறை தலைவரும், சமூக பொருளாதார மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ.கணபதிராவ் கூறினார்.

இவ்வாண்டு, ஐ-சீட் மூலம் உதவி பெறும் சிறு தொழில்முனைவோருக்கு RM15 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரி 3,000 வருகையாளர்களை ஈர்க்க நாங்கள் இலக்கு கொண்டுள்ளோம் என்று இங்குள்ள ஐடியல் கன்வென்ஷன் சென்டரில் (ஐடிசிசி) செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் நோக்கம், ஐ-சீட் மூலம் உதவி பெறும் சிறு தொழில் முனைவோருக்கு 100 சாவடிகளை இலவசமாக வழங்கி அவர்களின் பொருள் மற்றும் சேவைகளை காட்சிப் படுத்துவதும் வணிகத்தை விளம்பரப்படுத்தி விரிவுபடுத்த உதவுவதாகும். இந்தத் திட்டத்தில் உலர் உணவு, பிஸ்கட், உடைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் பிற சிறு தொழில்முனைவோர் உற்பத்தி மற்றும் வணிக பொருட்களை விற்பனை செய்யும் சாவடிகளும் கொண்டிருக்கும்.

கூடுதலாக, 20 அரசு நிறுவன சாவடிகள் மற்றும் கூடுதல் சாவடிகள் சாய் சூரியா நிகழ்ச்சி அமைப்பாளர் திட்ட நிர்வாகத்தை மேம்படுத்தவும் மக்களின் கவனத்தை ஈர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடாரத்திற்கு வெளியே நாங்கள் 10 ஐ-சீட் உதவியைப் பெற்ற நடமாடும் உணவு வணிகத்திற்கும் இடம் அமைத்துள்ளோம் என்றார்.


Pengarang :