ECONOMYNATIONAL

 செராஸ் புனர்வாழ்வு மருத்துவமனையில் நஜிப்பிற்கு சிகிச்சை-சிறை இலாகா தகவல்

கோலாலம்பூர், செப் 21- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் செராஸ் புனர்வாழ்வு மருத்துவமனையில் (எச்.ஆர்.சி.) சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்.
கடந்த திங்கள்கிழமை கோலாலம்பூர் மருத்துவமனையிலிருந்து எச்.ஆர்.சி. மருத்துவமனைக்கு நஜிப் மாற்றப்பட்டதாக சிறை இலாகா அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

கோலாலம்பூர் மருத்துவமனை அல்லது எச்.ஆர்.சி. மருத்துவ நிபுணர்கள் அனுமதி வழங்கியவுடன் நஜிப் சிறைவாசத்தை அனுபவிக்க மீண்டும் காஜாங் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று அது தெரிவித்தது.

நஜிப்பின் உடல் நிலை திருப்திகரமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரை சிகிச்சைக்கு கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் கடந்த 12 ஆம் தேதி உத்தரவிட்டார்.

சிறைச்சாலை சட்டத்தின் 37வது பிரிவு மற்றும் ஐக்கிய நாடுகளின் சபையின் நிலையான குறைந்தபட்ச விதிகள் (மண்டேலா விதி) ஆகியவற்றின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிறைச்சாலைத் துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

கைதிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றும் அதே வேளையில் அவர்களின் உடலாரோக்கியம் மீதும் உரிய கவனம் செலுத்துவது சிறை அதிகாரிகளின் கடமை என்று சிறைச்சாலைச் சட்டம் கூறுகிறது.


Pengarang :