ECONOMYSELANGOR

சிலாங்கூர் மலிவு விற்பனை வழிவழி RM800,000க்கும் அதிகமாக சேமிக்க முடிந்தது, இந்த முயற்சி 717 இடங்களில் தொடர்கிறது

கோலாலம்பூர், செப் 21: ஏசான் மக்கள் மலிவு விற்பனைத் திட்டத்தின் மூலம் அடிப்படைத் தேவைகளை வாங்கும் இம்மாநில மக்கள் மொத்தம் RM880,000 சேமிப்பை அனுபவிக்கின்றனர் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

கடந்த செப்டம்பர் 6 முதல் தற்போது வரை 27 மாநில சட்டமன்றங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டின் அடிப்படையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“ஏசான் மக்கள் விற்பனை திட்டத்தில் வாங்கியதன் விளைவாக மக்கள் அனுபவிக்கும் மானியத்தின் மொத்த மதிப்பு RM880,000 ஆகும், மேலும் இந்த திட்டத்திற்காக அடையாளம் காணப்பட்ட 717 இடங்களுக்கு நாங்கள் தொடர்வோம்.

“சிலாங்கூர் மக்கள் இந்த வாய்ப்பை தவற விடக் கூடாது, ஏனென்றால் ஒவ்வொரு மாநில சட்டமன்ற தொகுதியிலும்  இந்த மலிவான விற்பனை நடத்த ஒன்பது முதல் 10 மடங்கு வரை நாங்கள் ஒதுக்குகிறோம்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகம் (பிகேபிஎஸ்) நடத்தும் திட்டம், கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப் பட்டதில் இருந்து 80,000க்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளனர்.

ஆகஸ்ட் 31 முதல் டிசம்பர் 31 வரை அனைத்து 56 சட்டமன்றங்களில் மாநில அளவில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் இணைந்து RM1 கோடி ஒதுக்கீட்டில் மலிவான விற்பனை முயற்சி தொடங்கப்பட்டது.

கோழி, இறைச்சி, மீன், முட்டை, அரிசி மற்றும் சமையல் எண்ணெய் என ஆறு வகையான அடிப்படை பொருட்கள் தற்போதைய சந்தை விலையுடன் ஒப்பிடும் போது மலிவாக விற்கப்படுகின்றன.

பொதுமக்கள் பிகேபிஎஸ் சமூகப் பக்கத்தைப் பார்வையிடலாம் அல்லது https://linktr.ee/myPKPS என்ற இணைப்பை அவ்வப்போது விற்பனை செய்யும் இடங்களைத் தெரிந்துக் கொள்ளலாம்


Pengarang :