ECONOMYSELANGOR

பிகேபிஎஸ் மலிவு விற்பனைக்கு மானியம் வழங்க அரசு RM1.2 கோடியை செலவிடுகிறது

கோம்பாக், செப்டம்பர் 25: மக்களின் சுமையைக் குறைக்க ஏசான் மக்கள் மலிவு விற்பனை திட்டத்தின் மூலம் அடிப்படைத் தேவை உணவு பொருட்களுக்கு மானியம் வழங்க சிலாங்கூர் RM1.2 கோடி செலவிட்டது.

கடந்த வாரம் வரை, சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சி கழகம் (பிகேபிஎஸ்) கொண்டு வந்த பல்வேறு பொருட்களை வாங்கிய குடியிருப்பாளர்கள் மொத்தம் 880,000 ரிங்கிடை சேமிக்க  முடிந்ததாக   என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஏசான் மக்கள் மலிவு விற்பனை திட்டமானது அடிப்படை உணவுப் பொருட்களை சந்தையை விட 30 விழுக்காடு குறைவான விலையில் வழங்குகிறது.

ஆறு முக்கிய பொருட்கள் கோழி RM10, புதிய திட மாட்டு இறைச்சி (ஒரு பேக் RM10), பி கிரேடு முட்டைகள் (ஒரு அட்டை RM10), செலாயாங் மற்றும் கானாங்கெளுத்தி மீன் (ஒரு பேக் RM6), ஐந்து கிலோகிராம் அரிசி (ஒரு பேக்கிற்கு RM10) மற்றும் ஐந்து கிலோ சமையல் எண்ணெய் (ஒரு பாட்டிலுக்கு RM25).

பொதுமக்கள் பிகேபிஎஸ் வலைதள பக்கத்தைப் பார்வையிடலாம் அல்லது https://linktr.ee/myPKPS என்ற இணைப்பை அவ்வப்போது விற்பனை செய்யும் இடங்களை பற்றி  விவரமறியலாம்.


Pengarang :