ECONOMYSELANGOR

அக்டோபர் 1 முதல் சட்டமன்ற சேவை மையத்தில் மாநில காப்பீட்டு திட்டத்துக்கு விண்ணப்பிக்கவும்

ஷா ஆலம், செப்டம்பர் 26: சிலாங்கூர் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் (இன்சான்) பலன்களுக்கு பொதுமக்கள் அக்டோபர் 1 முதல் மாநில சட்டமன்றம், சமூக சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ இன் படி, குடியிருப்பாளர்களின் நலனைத் தொடர்ந்து கவனிப்பதற்காக இத்திட்டத்தின் வழி RM10,000 முதல் RM20,000 வரை பாதுகாப்பு பெறலாம் என்கிறது.

“இந்த திட்டத்தில் பங்கு பெறுவதின் வழி ஒருவர் இறந்துவிட்டால் அவரின் குடும்பத்திற்கு உதவி தொகைகள் வழங்கப்படும். என்று கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு தலைவர் அகமது அஸ்ரி ஜைனல் நோர் கூறினார்.

ஆகஸ்ட் 30 அன்று, டத்தோ மந்திரி புசார் மொத்தம் 60 லட்சம் குடிமக்களுக்கான பொதுக் காப்பீட்டு  திட்டத்தின் வழி மக்களுக்கு கிடைக்கும் பயனை எடுத்துரைத்தார், ஆனால் பிரீமியம் செலவை முழுமையாக மாநில அரசு ஏற்கும் என்று அறிவித்தார்.


Pengarang :