ECONOMYSELANGOR

எம்பிபிஜே 144 சட்டவிரோத கட்டுமானங்களை அடையாளம் கண்டுள்ளது

ஷா ஆலம், செப்டம்பர் 30: பெட்டாலிங் ஜெயா சிட்டி கவுன்சில் (எம்பிபிஜே) ஜனவரி மற்றும் ஆகஸ்ட் இடையே குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களை உள்ளடக்கிய 144 அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அடையாளம் கண்டுள்ளது.

இந்த குற்றத்திற்காக மொத்தம் 84 சம்மன்கள் மற்றும் அபராதங்கள் வழங்கப்பட்டதாகவும், நோட்டீஸ் காலம் முடிந்த பிறகு 20 சம்பவங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் டத்தோ பண்டார் முகமது அஸான் முகமது அமீர் தெரிவித்தார்.

எம்பிபிஜே பயன்படுத்திய வழிகாட்டுதல்களின்படி அங்கீகரிக்க முடியாத கட்டமைப்புகளை நிர்மாணித்ததைத் தொடர்ந்து 40 இடிப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.

” வளாகத்தின் உரிமையாளர் ஆலோசகர்கள் மற்றும் ஒப்பந்த காரர்களிடமிருந்து முறையான ஆலோசனையைப் பெறாததால் அனுமதியின்றி கட்டுமானங்கள் கட்டப்படுவது அதிகரிக்கும்” என்று இன்று மாதாந்திர கூட்டத்துடன் கூடிய  செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

 கட்டிடங்களை புதுப்பிக்க விரும்பும் வளாக உரிமையாளர்களின் அனுமதி விண்ணப்பங்கள் தொடர்பான தகவல்கள் மாநகராட்சிக்கு சென்றடையாத போது சிக்கல்கள் ஏற்படுகின்றன.

“இந்தச் சூழ்நிலையானது, விற்பனைச் செயல்பாட்டின் போது, கட்டிட மாற்றங்களை வங்கியால் மதிப்பிட படாமலும், தீ விபத்து ஏற்பட்டால் காப்பீடு செய்யப்படாமல் இருக்கலாம்” என்று முகமது அஸான் கூறினார்.

இதற்கிடையில், எம்பிபிஜே குறிப்பிட்ட வகைகளின்படி கட்டுமானத்திற்கான ஒப்புதல் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்குவதற்கான ஒரு முறையை வகுத்துள்ளது என்றார்.


Pengarang :