ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 காரணமாக 12,291 புதிய சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர், 3 அக்: செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 1 வரையிலான 39வது தொற்றுநோயியல் வாரத்தில் மொத்தம் 12,291 புதிய கோவிட்-19 சம்பவங்கள்  பதிவாகியுள்ளன என்று சுகாதார தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

புதிய சம்பவங்களின் எண்ணிக்கை 5.2 விழுக்காடு குறைந்துள்ளது.

உள்ளூர் சம்பவங்களின் எண்ணிக்கை 5.2 விழுக்காடு குறைந்து 12,260 ஆக உள்ளது, அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவங்கள் 6.9 விழுக்காடு அதிகரித்து 31 சம்பவங்களாக உள்ளன.

 ” கோவிட்-19 இறப்பு சம்பவங்கள் 35 விழுக்காடு குறைந்து 26 சம்பவங்களாக உள்ளன, அதே  வாரத்தில் சராசரி தினசரி செயலில் உள்ள சம்பவங்கள் முன்பை விட 2.5 விழுக்காடு குறைந்து 24,713 சம்பவங்களாக உள்ளன,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குணப்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 8.4 விழுக்காடு குறைந்து 12,534 சம்பவங்களைக் காட்டியது, என்றார்.

கோவிட்-19 இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 36,374 ஆகவும், கிளஸ்டர் ஒட்டுமொத்த எண்ணிக்கை 7,081 ஆகவும், 13 கிளஸ்டர்கள் இன்னும் செயலில் உள்ளது என்றும் அவர் கூறினார்.


Pengarang :