ECONOMYNATIONAL

அமெரிக்க வான் போக்குவரத்து ஆணையம்  மலேசிய விமானப் போக்குவரத்து மதிப்பை மேம்படுத்தியது

வாஷிங்டன், அக் 4 – மலேசியாவின் விமானப் பாதுகாப்பு மதிப்பீட்டை தாங்கள் மேம்படுத்தியுள்ளதை அமெரிக்க மத்திய வான் போக்குவரத்து ஆணையம் (எஃப்.ஏ.ஏ.) திங்களன்று உறுதிப்படுத்தியது.

அமெரிக்காவிற்கு புதிய விமானச் சேவைகளை மேற்கொள்வதிலிருந்து மலேசிய விமான நிறுவனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எஃப்.ஏ.ஏ. இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மலேசியாவை பிரிவு ஒன்றிலிருந்து பிரிவு இரண்டிற்கு எஃப்.ஏ.ஏ. தரம் குறைத்தது.

இதன்வழி அமெரிக்காவுக்கான மலேசிய விமானங்களின் சேவை நடப்பு அளவில் நிலை நிறுத்தப்பட்டதோடு அமெரிக்க விமான நிலையங்களில் கூடுதல் சோதனைக்கும் உட்படுத்தப்படும் சூழலும் ஏற்பட்டது.


Pengarang :