ECONOMYSELANGOR

வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவ 5,000 உணவு கூடைகளுடன் டீம் சிலாங்கூர் தயார்.

ஷா ஆலம், 4 அக்: இந்த ஆண்டு இறுதியில்  வெள்ள பேரிடர் ஏற்பட்டால் பாதிக்கப்படுபவர்களுக்கு டீம் சிலாங்கூர் மொத்தம் 5,000 உணவு கூடைகள் தயார் செய்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப் படுபவர்கள் தேவைக்கேற்ப அன்றாடத் தேவைகள் அடங்கிய உணவு கூடைகள் விநியோகிக்க தயாராக இருப்பதாக அதன் செயலகத்தின் தலைவர் சியாஹைசல் கெமான் தெரிவித்தார்.

“இந்த நேரத்தில், தற்காலிக தங்குமிடத்தில் (பிபிஎஸ்) இருக்கும் போது உடனடியாக உண்ணக்கூடிய அல்லது எளிதில் சமைக்கக்கூடிய உணவுகளில் நாங்கள் கவனம் செலுத்தும் ரீதியில் சுமார் 3,000 முதல் 5,000 கூடைகளை தயார் செய்தோம்.

“பாதிக்கப் பட்டவர்களுக்கு சுகாதார பரிசோதனை கருவிகளை விநியோகிக்கும், இதனால் அவர்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படும். அவை தற்காலிக தங்குமிடம்,  பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கும்  விநியோகம் செய்யப்படும்,” என்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.

கடந்த ஆண்டு வெள்ளத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களை பிபிஎஸ்ஸில் வைப்பதற்கான செயல்முறைக்கு உதவுவதற்காக டீம் சிலாங்கூர் உட்பட தன்னார்வலர்களின் குழுவை மாநில அரசு திரட்டியது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட டீம் சிலாங்கூர், 71 இடங்களில் பாதிக்கப்பட்ட 3,403  வீடுகளை சுத்தம் செய்தல், குடிநீர் விநியோகம், உணவு கூடைகளை பேக்கிங் செய்தல் மற்றும் விநியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு.

டீம் சிலாங்கூர் தன்னார்வலராக ஆவதற்கு ஆர்வமுள்ள நபர்கள் bit.ly/SkuadBencanaTeamSelangor இல் பதிவு செய்யலாம் அல்லது ஏதேனும் விளக்கம் பெற  013-530 3578 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.


Pengarang :