ECONOMYNATIONAL

மைஏர்லைன் குறைந்த கட்டண விமான நிறுவனமாக மட்டுமே செயல்படும்

கோலாலம்பூர், அக் 6– புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மைஏர்லைன் விமான நிறுவனம் மிகக் குறைந்த கட்டண விமான நிறுவனமாக அல்லாமல் கடந்தாண்டு மலேசிய வான் போக்குவரத்து ஆணையத்திடம் (மாவ்கோம்) விண்ணப்பித்தபடி குறைந்த கட்டண விமான நிறுவனமாக மட்டுமே செயல்படும்.

தங்கள் விமான நிறுவனம் மிகக் குறைந்த கட்டண முறையை அமல்படுத்தாது என்றும் அந்த மிகக் குறைந்த கட்டணம் என்ற ‘பதம்‘ வேறொரு தரப்பினரால் இவ்வாண்டு தொடக்கத்தில் பரப்பப்பட்டது என்றும் மைஏர்லைன் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ரேய்னர் தியோ கெங் ஹோக் கூறினார்.

சந்தையில் புதிதாக நுழைந்துள்ள குறைந்த கட்டண விமான நிறுவனம் என்ற முறையில் சிக்கனம் எங்கள் அடிப்படைக் கொள்கையாக இருக்கும். அதே வேளையில் பாதுகாப்புக்கு முதலிடம் வழங்கப்படும் என அவர் சொன்னார்.

செலவுகளைக் குறைப்பதற்கு நாங்கள் தொழில்நுட்பத்தையும் புத்தாக்கத்தையும் பயன்படுத்துவோம். எங்கள் பயணிகளுக்கு நல்ல தரமான சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துவோம் என்றார் அவர்.

தற்போது மைஏர்லைன் எனப்படும் இஸட்9 இலிட் சென்.பெர்ஹாட் நிறுவனத்திற்கு விமான சேவை லைசென்சுக்கான நிபந்தனையுடன் கூடிய  அனுமதியை மாவ்கோம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வழங்கியது.


Pengarang :