ECONOMYSELANGOR

இன்று தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெறும் ஐ-சீட் தீபாவளி கார்னிவலில் கலந்து கொள்ள மக்கள் அழைக்கப்படுகின்றனர்

கிள்ளான், அக் 7: கடந்த 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய சிலாங்கூர் அதிகாரமளித்தல் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு (ஐ-சீட்) திட்டம் பின்தங்கிய இந்திய தொழில் முனைவோர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிலாங்கூர் மந்திரி புசார்(கட்டமைப்பு) அல்லது எம்பிஐ, எம்பிகே, கேகேஐ மற்றும் கிள்ளான் லிட்டல் இந்தியா வணிகர்கள் இணைந்து ஏற்பாடு செய்யும் மெகா ஐ-சீட் கார்னிவல் நிகழ்ச்சி இன்று தொடங்கி அக் 9 ஆம் தேதி வரை பாடாங் செட்டியில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி நடைபெறும்.

ஐ-சீட் மூலம் உதவி பெற்ற சிறு தொழில் முனைவோர்களின் 100 சாவடிகளை திறக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் கலைஞர்களின் கலை மற்றும் கலாச்சார ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி, இளைஞர்களுக்கான இசை நடன போட்டி ஆகியவை ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பெரியவர்களுக்காக இரத்த தானம் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அதிர்ஷ்ட குலுக்கில் மோட்டார் சைக்கிள்கள், தொலைக்காட்சிகள், சம்சுங் Tab மற்றும் கைத்தொலைபேசி போன்ற கவர்ச்சிகரமான அதிஸ்டஅதிஸ்ட பரிசுகளை வெல்லும் வாய்ப்பும் உள்ளது.

எனவே, கிள்ளான் அருகே உள்ள அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கி பயன்பெறவும் நிகழ்ச்சியை குதூகலப்படுத்தவும் இந்திய சமூக-பொருளாதார மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் அழைக்கிறார்.


Pengarang :