ECONOMYHEALTHNATIONAL

புகையிலை எதிர்ப்பு மசோதாவில் 23 திருத்தங்கள் பரிந்துரை- கைரி தகவல்

கோலாலம்பூர், அக் 7- புகையிலை பொருட்கள் மற்றும் புகைத்தல் கட்டுப்பாடு மசோதா 2022 தொடர்பான 23 திருத்தங்கள் அடங்கிய குழு அறிக்கை நடப்பு மக்களவை  கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

மசோதா மீதான விவாதம் மீண்டும் தொடங்குவதற்கு முன் திருத்தம் செய்வதற்கு முன்மொழியப்பட்ட 1, 2, 5, 13, 17, 21, 24, 26, 27, 28, 29, 30, 31, 33, 34, 35 ஆகிய ஷரத்துகளை இந்த திருத்தம் உள்ளடக்கியுள்ளதாக அவர் கூறினார்.

இது தவிர, 38, 49, 53, புதிய உட்பிரிவு 54ஐச் சேர்த்தல் மற்றும் உட்பிரிவு 54 மற்றும் 55 ஆகியவற்றுக்கு மறு எண் குறியிடுதலும் இதில் அடங்கும் என அவர் தெரிவித்தார்.

புகையிலை பொருட்கள் மற்றும் புகைத்தல் மசோதா 2022 பற்றி ஆய்வு செய்யும் நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழு அக்டோபர் 5 ஆம் தேதி அதன் நடவடிக்கைகள் மற்றும் மசோதாவை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்தது. இது பொதுவாக ‘தலைமுறை ஆட்ட முடிவு’ மசோதா என அழைக்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்தமாக, மசோதாவில் உள்ள விதிகளை சரிசெய்வதற்காக இருதரப்பும் நாடாளுமன்ற சிறப்பு தேர்வுக்குழுவை முதிர்ச்சியான மற்றும் இணக்கமான முறையில்  ஐந்து முறை சந்தித்தது என்றார் அவர்.

அனைத்து தேர்வுக்குழு உறுப்பினர்களும் அறிக்கை அறிக்கையை ஒருமித்த கருத்துடன் ஒப்புக்கொண்டதோடு இந்த மசோதாவில் செய்ய வேண்டிய திருத்தங்களை முன்மொழிந்தனர் என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


Pengarang :