ECONOMYSELANGOR

பிகேஎன்எஸ் உள்ளூர் தொழில் முனைவோர் அயல்நாட்டு வணிகத்தில் ஈடுபட 13 சக்திவாய்ந்த திட்டங்களை செயல்படுத்துகிறது

ஷா ஆலம், 14 அக்: சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) வணிகத்தில் ஆர்வத்தை வளர்க்கும் முயற்சியாக சமூகத்தின் மத்தியில் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை மேம்படுத்த 13 திட்டங்களை செயல்படுத்தும்.

பிகேஎன்எஸ் தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு (பிபியு) பங்கேற்பாளர்களுக்கு அவர்களின் வணிக அறிவை மேம்படுத்த தொழில் முனைவோர் பயிற்சி வழிகாட்டுதலை வழங்குகிறது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ மாமூட் அப்பாஸ் கூறினார்.

“பள்ளி மாணவர்களிடையே தொழில் முனைவோர் கலாச்சாரத்துடன் கூடுதலாக, மாணவர் தொழில்முனைவோர் திட்டம், பட்டதாரி தொழில் முனைவோர் திட்டம், குடை காப்பக விற்பனையாளர் திட்டம் (VIP) மற்றும் பூமிபுத்ரா துணை ஒப்பந்ததாரர் திட்டம் (SKB) ஆகியவையும் செயல் படுத்தப் படுகின்றன.

பயிற்சித் திட்டத்தில் கூடுதலாக, பிபியு இங்குள்ள பிகேஎன்எஸ் BizPoint கட்டிடம், செக்சன் 7 இல் வேலை இடம், நிகழ்வு மற்றும் கருத்தரங்கு அறை நியாயமான விலையில் வாடகைக்கு வழங்குகிறது.


Pengarang :