ECONOMYSELANGOR

பொது இடங்களில் சுற்றித் திரியும் வளர்ப்பு பிராணிகளை எம்பிகேஎஸ் பிடிக்கிறது.

ஷா ஆலம், அக் 20: கோலா சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் (எம்பிகேஎஸ்) கடந்த சனிக்கிழமை பொது மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைக் கண்காணித்து பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது.

மாடு, எருமை, ஆடு போன்ற வளர்ப்புபிராணிகள் பொது இடங்களில் சுற்றித் திரிவதைத் தடுப்பதுடன், சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பையும் நோக்கமாகக் கொண்டது இந்த நடவடிக்கை.

எம்பிகேஎஸ் இன் கூற்றுப்படி, சுங்கை யூ, பெஸ்தாரி ஜெயா, ஈஜோக் மற்றும் ஜெராம் ஆகிய இடங்களை சுற்றி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இரண்டு மாடுகளையும் ஒரு ஆட்டையும் கைப்பற்றி பறிமுதல் செய்வதில் வெற்றி பெற்றது.

அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் கால்நடைகள்/ ஆடுகள்  பசு-எருமை கால்நடை கட்டுப்பாட்டுச் சட்டம் 1971ன் பிரிவு 4 (4)ன் கீழ் மூன்று கால்நடை உரிமையாளர்களுக்கு மொத்தம் மூன்று அபராதங்கள் வழங்கப்பட்டன.

“அனைத்து விலங்குகளும் மேல் நடவடிக்கைக்காக எம்பிகேஎஸ் விலங்குகள் அடைப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன,” அவை ஊராட்சி மன்றங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஏற்ப, தனி விலங்கு கூண்டுகளில் அடைக்கப்பட்டும் அதன் மதிப்பு மற்றும் ஏற்பட்ட செலவு களுக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படுவதாக என்று அவர் பேஸ்புக்கில் தெரிவித்தார்.


Pengarang :