ECONOMYNATIONAL

தேர்தல் பிரசாரத்தின் போது விவேகத்துடன் செயல்படுவீர்- வேட்பாளர்கள், ஆதரவாளர்களுக்கு மாமன்னர் அறிவுறுத்து

கோலாலம்பூர், அக் 20- வரும் நவம்பர் 5ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கும் 15வது பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போது அனைத்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் விவேகத்துடன் செயல்படுமாறு மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் நடைபெறும் நவம்பர் 19ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தேர்தல் ஆணையம், அரச மலேசிய போலீஸ் படை உள்ளிட்ட அமலாக்கத் தரப்பினர் விதித்துள்ள நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றி பிரசாரத்தில் ஈடுபடும்படி மாமன்னர் கேட்டுக் கொண்டுள்ளதாக இஸ்தானா நெகாராவின் அரச அதிகாரி டத்தோ ஸ்ரீ அகமது பாடில் சம்சுடின் கூறினார்.

தேர்தல் பிரசார ஆர்வத்திலும் பரபரப்பிலும் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் உயர் நெறிகளையும் மரபுகளையும் மீறிவிடக் கூடாது. அவதூறான, சினமூட்டக்கூடிய மற்றும் ஒருவரை ஒருவர் தரம் தாழ்த்தி திட்டக்கூடிய செயல்களில் ஈடுபடுவதை அவர்கள் தடுக்க வேண்டும் என்று மாமன்னர்  கேட்டுக் கொண்டுள்ளார் என அவர் சொன்னார்.

பதினைந்தாவது பொதுத் தேர்தல் சிறப்பான முறையிலும் பாதுகாப்பாகவும் நடைபெற இறைவனை பிரார்த்திக்கும்படி மாமன்னர் வலியுறுத்தியுள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :