ECONOMYSELANGOR

குப்பைக் கொட்டும் மையங்களில் தினசரி குவியும் 2,000 டன் துணிக் கழிவுகள்

ஷா ஆலம், அக் 21- சுமார் 2,000 டன் துணிகள் சம்பந்தப்பட்ட குப்பைகள் கடந்த 2019 ஆம் ஆண்டில் குப்பை அழிப்பு மையங்களில் கொட்டப்பட்டதாக கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் கூறியது.

சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு துணிக் கழிவுகளும் காரணமாக உள்ளதாக அந்நிறுவனத்தின் துணை நிறுவன நிர்வாக மற்றும் திட்ட அமலாக்க தலைமை நிர்வாகி அஹாடி முகமது நாசீர் கூறினார்.

துணிகளில் திறந்த வெளியில் வீசும் போது அதிலிருந்து மெதானா வாயு வெளிப்படுகிறது. ஆபத்து மிகுந்த இந்த பசுமை இல்ல வாயு உலக வெப்பமயமாதலுக்கும் காரணமாக விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.

அதோடு மட்டுமின்றி, அந்த துணிகளில் உள்ள வர்ணம் மண்ணில் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர் மாசுபடுவதற்கும் பின்னர் அவை ஆறுகளுக்கு பரவுவதற்கும் காரணமாக அமைக்கிறது என்று அவர் சொன்னார்.

ஆகவே, குப்பைக் கொட்டும் மையங்களில் துணிகள் வீசப்படுவதை தடுப்பதற்காக கடந்தாண்டு தொடங்கி துணிகளை மறுசுழற்சி செய்யும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

போத்தல்கள், டின்கள், காகித அட்டைகள் மட்டுமே மறுசுழற்சி செய்யும் பொருள்கள் என பலர் கருதுகின்றனர். ஆனால், துணிகளையும் மறுசுழற்சி செய்ய முடியும் என்றார் அவர்.


Pengarang :