ANTARABANGSAECONOMY

வளரும் நாடுகளுக்கு பருவநிலை நிதி அதிகரிக்கப்படும்- தென் கொரிய பிரதமர் தகவல்

சியோல், அக் 27– பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படக்கூடிய தாக்கத்தை குறைப்பதற்கு ஏதுவாக வளரும் நாடுகளுக்கு வழங்கப்படும் நிதி மேலும் அதிகரிக்கப்படும் என்று தென் கொரிய அதிபர் ஹான் டக் சூ கூறினார்.

பசுமை இல்ல வாயு வெளியேற்றம் மற்றும் பருநிலை மாற்ற விளைவுகளைக் குறைப்பதற்கு வளரும் நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தென் கொரியான வலுவான ஆதரவை வழங்கும் என்று அவர் சொன்னார்.

அகில பசிபிக் பிராந்திய நீடித்த கலந்துரையாடல் மீதான மாநாட்டில் உரையாற்றும் போது அதிபர் ஹான் இதனைத் தெரிவித்ததாக யோன்ஹாப் செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கான பருவநிலை நிதி அதிகரிக்கப்படும் என்பதோடு பருநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடி வரும் அனைத்துலக அமைப்பான கிரீன் கிளைமேட் ஃபண்ட் எனும் நிறுவனத்திற்கும் விரிவுபடுத்தப்படும் தென் கொரியா என அதிபர் குறிப்பிட்டார்.

பசுமை மீட்சிக்கு உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் தமதுரையில் கேட்டுக் கொண்டார்.

வளரும் நாடுகள் குறைந்த கார்பன் பொருளாதாரத்திற்கு மாறுவதற்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துவதற்கும் ஏதுவாக தென் கொரியா தனது அனுபவத்தையும் தொழில்நுட்பத்தையும் அந்நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :