ECONOMYMEDIA STATEMENTNATIONAL

திருணம ஏற்பாட்டில் மோசடி- அழகு சாதன நிறுவன உரிமையாளர் கைது

ஷா ஆலம், அக் 30- திருமண பேக்கேஜ் மோசடியில் தொடர்புடையதாகக் கூறப்படும் மணப்பெண் அழகு நிறுவன உரிமையாளர் நேற்று  பெந்தோங்  டோல் சாவடியின் மேற்கு நோக்கிச் செல்லும் தடத்தில் கைது செய்யப்பட்டார்.

 அந்த 28 வயது சந்தேக நபரை பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு  நேற்றிரவு 9.30 மணியளவில் கைது செய்ததாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

பெந்தோங் மாவட்டத்தில் நிகழ்ந்த திருமண ஏற்பாட்டு மோசடி சம்பவங்கள் தொடர்பில் தேடப்படும் முக்கிய குற்றவாளி அந்தபர் ஆவார். இதன் தொடர்பாக, குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் மூன்று விசாரணை  அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். ஸைஹான் முகமது கஹார் கூறினார்.

கைதான சந்தேக நபர் வரும் நவம்பர் 1 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்  என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபருக்குச் சொந்தமான நிறுவனத்தால் ஏற்பட்ட  20,900 வெள்ளி இழப்பு தொடர்பில்  இரண்டு புகார்களைப் போலீசார் பெற்றதைத் தொடர்ந்து சந்தேக நபர் தேடப்பட்டு வருவதாக ஸைஹான் கடந்த வியாழக்கிழமை கூறியிருந்தார்.

முகநூல் மூலம் வெளியிடப்பட்ட திருமண ஏற்பாட்டுத் தொகுப்பு தொடர்பான விளம்பரத்தை நம்பி தாங்கள் ஏமாந்து போனதாக 28 மணமகள் மற்றும் 57 வயதுடைய மணமகளின் தாயார் போலீசில் புகார் செய்திருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

Pengarang :