ECONOMYMEDIA STATEMENTNATIONAL

காட்டாற்று வெள்ள அபாயம் உள்ள 186 இடங்கள் நவம்பர் முதல் பொது மக்களுக்கு மூடப்படும்

கோத்தா பாரு, அக் 30- நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ள
காட்டாற்று வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ள 186 வரும் நவம்பர்
தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி வரை மூடப்படும் என்று எரிசக்தி மற்றும்
இயற்கை வள அமைச்சர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் கூறினார்.
பருவமழை காலத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம்
உள்ளதால் இப்பகுதிகளில் பொழுதுபோக்கு நடவடிக்கைளில் ஈடுபடுவதை
தவிர்க்கும்படி வட்டார மக்களை கனிம வள மற்றும் புவிஅறிவியல் துறை
அறிவுறுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.
கெடா, பாலிங்கில் அண்மையில் ஏற்பட்டதைப் போன்ற சம்பவம் 30
ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
அத்தகைய ஆபத்தைக் கொண்ட கோல கிராயில் உள்ள கூனோங்
ஸ்தோங், பாசீர் பூத்தேவில் உள்ள ஜெராம் லினாங் உள்ளிட்ட பகுதிகள்
பொது மக்களுக்கு மூடப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள பந்தாய் சகாயா பூலானில் இயற்கை வள சூழியல் சுற்றுலாவை
மேம்படுத்துவது தொடர்பான கருத்தரங்கைத் தொடக்கி வைத்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
காட்டாற்று வெள்ளம் ஏற்படும் 186 இடங்கள் உள்பட வெள்ளம் அபாயம்
கொண்ட் 5,500 இடங்கள் நாடு முழுவதும் அடையாளம் காணப்  பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

Pengarang :