ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பெர்மாத்தாங் தொகுதியில் 300 பேர் இலவச காப்புறுதித் திட்டத்தில் பதிவு

ஷா ஆலம், அக் 30- பெர்மாத்தாங் தொகுதியைச் சேர்ந்த 300 பேர் சிலாங்கூர் பொது காப்புறுதி திட்டத்தில் (இன்சான்) இதுவரை பதிவு செய்துள்ளனர்.

இத்திட்டத்தில் மேலும் அதிகமானோர் பதிவு செய்தவதற்கு ஏதுவாக தொகுதி நிலையில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் இந்த காப்புறுதி திட்டத்திற்காக பிரத்தியேக முகப்பிடங்கள் திறக்கப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோசான ஜைனால் அபிடின் கூறினார்.

பலர் சொந்தமாகவும் இணையம் வாயிலாகவும் இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். எனது கணிப்பின்படி இத்திட்டத்திற்கு பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 300 பேர் வரை இருக்கும் என அவர் சொன்னார்.

இந்த காப்புறுதி திட்டத்தில் பதிவு செய்வதற்கான வழி முறைகளை பொதுமக்களுக்கு சொல்லித் தருவதன் மூலம் அவர்களுக்கு உதவ விரும்புகிறோம் என்றார் அவர்.

இம்மாதம் 23ஆம் தேதி கிள்ளான், சுல்தான் சுலைமான் அரங்கில் நடைபெற்ற  கிள்ளான் மாவட்ட நிலையிலான ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வின் போது இந்த இன்சான் காப்புறுதி திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்த இலவச காப்புறுதி திட்டத்தின் மூலம் மாநிலத்திலுள்ள சுமார் 60 லட்சம் பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு உண்டாகும் செலவை மாநில அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ளும். 

கடந்த அக்டோபர் 1 முதல் தேதி இந்த காப்புறுதி திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 40,000 பேர் பதிவு செய்துள்ளதாகவும் ஆண்டு இறுதிக்குள் பத்து லட்சம் பேரை இத்திட்டத்தில் சேர்க்க நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் மந்திரி புசார் சொன்னார்.


Pengarang :