ECONOMYNATIONAL

மக்களின் துயர் அறிந்தவர்- பிரதமராகும் முழுத் தகுதியும் கொண்டவர் அன்வார்- வாக்காளர்கள் கருத்து

அம்பாங், நவ 18- சிறந்த மற்றும் அனைத்துலக நிலையில் அறியப்பட்ட அமைச்சராகவும்  மக்களின் துயர நிலையைப் புரிந்தவராகவும் விளங்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராகும் அனைத்து தகுதிகளையும் கொண்டத் தலைவராக விளங்குகிறார் என்று வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அன்வாரின் அரசியல் பயணத்தை தாம் நீண்ட நாட்களாக அணுக்கமாக கவனித்து வருவதாகவும் அவர் பிரதமராவதற்கு இப்பொதுத் தேர்தலே தக்க தருணம் என்றும் லோரி ஓட்டுநரான என்.ரஞ்சிட் சிங் (வயது 51) கூறினார்.

அவர் நிதியமைச்சராக சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளதோடு அனைத்துலக நிலையில் நன்கு அறியப்பட்ட தலைவராகவும் விளங்கினார் என்று நேற்று இங்கு நடைபெற்ற மாபெரும் இறுதிச் சுற்று பிரசாரத்தின் போது அவர் குறிப்பிட்டார்.

இதில் முக்கியமானது என்னவென்றால் அன்வார் மக்களின் சிரமம் அறிந்தவர் என்பதுதான். அவர் எதிர்நோக்கிய சவால்கள் மற்றும் அடக்கு முறைகள் அவரை வலுவான பேராளியாக மாற்றியுள்ளது என்றார் அவர்.

துணைப் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பதவிகளை வகித்ததன் மூலம் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு அன்வார் இப்ராஹிமினால் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று ஓய்வு பெற்ற தனியார் துறை ஊழியரான ஜூல்கிப்ளி அப்துல் அஜிஸ் (வயது 67) கூறினார்.

கோம்பாக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி உள்ளிட்ட தலைவர்கள் செய்த துரோகம் காரணமாக நாட்டை ஆட்சி புரிவதற்குரிய வாய்ப்பினை டத்தோஸ்ரீ அன்வார் இழந்தது குறித்து தாம் வருத்தமடைவதாக அவர் சொன்னார்.

நாளை நடைபெறவிருக்கும் நாட்டின் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி முன்னிறுத்தியுள்ளது.


Pengarang :