ECONOMYMEDIA STATEMENTNATIONAL

குடியிருப்பு பகுதிகளில் குறைந்த விலையில் சமையல் பொருள்கள் விற்பனை

ஷா ஆலம், நவ 22;ஜெலஜா எஹ்சான் ரக்யாட் (JER) திட்டம் ஒரு குடியிருப்பு பகுதியில் மேற்கொள்வதன் வழி இல்லத்தரசிகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவது எளிதாகுகிறது.
இதுபோன்ற விற்பனை திட்டம் இருக்கும்போது வீட்டு சமையல் பொருள்கள் வாங்க தன் கணவருக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை என 37 வயதான இல்லத்தரசி நோர்ஹயதி சுங்கை காண்டிஸ் மாநில சட்டமன்ற தொகுதியில் உள்ள தாமன் துன் தேஜா அபார்மென்டில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தப்போது கூறினார்.
அந்த விற்பனையில் பொருட்களை வாங்கிய  50 வயதான இல்லத்தரசி மகேஸ்வரி, இத்திட்டத்தின் கீழ் விற்கப்படும் பொருள்கள் மலிவானவை ஆனால் அவை தரமாகவும் புதிதாகவும் உள்ளன என்றார். அதனால் திருப்தி அடைவதாகவும், இத்திட்டம் பொருள்களின் விலை உயரும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினார்.
மற்றொரு இல்லத்தரசி நூருல் சியுஹாதா மஹ்மூத் (33) இத்திட்டம் சரியான நேரத்தில் நடந்ததாகவும் தன் வசிப்பிடத்தின் அருகில் குடியிருப்பவர்களுக்கும் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதையும் எளிதாக்கியுள்ளது என்றும் கூறினார்.
இவ்வார இறுதியில் தங்கள் குடியிருப்பில் சமையல் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்தின் வழி அந்நிகழ்ச்சிகான சமையல் பொருள்களை எளிதாக வாங்க முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, இல்லத்தரசி நோர்சகினா முகமட் கமருல்சாமன் (30), (JER) திட்டம் வந்ததும் அவரும் அவரின் அண்டை வீட்டாரும் உற்சாகம் அடைந்ததாகத் தெரிவித்தார். சமையல் பொருள்கள் வாங்க நீண்ட தூரம் செல்ல வேண்டியதில்லை என்றும் கூறினார். கோழி, அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் முட்டை வாங்குவதற்கு RM50க்கும் குறைவாகவே செலவாகும் என்றார்.

Pengarang :