ECONOMYHEALTHNATIONAL

டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் கடந்த வாரம் 7.1 விழுக்காடு குறைந்து 1,593 ஆக உள்ளது

கோலாலம்பூர், நவ 24: நவம்பர் 13 முதல் 19 வரை நடந்த 46வது தொற்றுநோய் வாரத்தில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தில் 1,715 ஆக இருந்த நிலையில் 122 பேர் அல்லது 7.1 விழுக்காடு குறைந்து 1,593 ஆக உள்ளது.

குறித்த வாரத்தில் டிங்கி காய்ச்சலால் ஏற்படும் சிக்கல்களால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என சுகாதார பணிப்பாளர் நாயகம் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

“2021 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 23,057 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது இன்றுவரை டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 54,570 ஆக உள்ளது, இது 31,513 சம்பவங்கள் அல்லது 136.7 விழுக்காடு அதிகரித்துள்ளது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 18 இறப்புகளுடன் ஒப்பிடும்போது டிங்கி சிக்கல்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆகும் என்று டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

ஹாட்ஸ்பாட் பகுதிகளின் எண்ணிக்கை 61 ஆகக் குறைந்துள்ளது என்றார்.

வெப்பமான காலநிலையில் ஏற்படும் திடீர் வெள்ளம் ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அதிகரிக்கிறது.

எனவே, ஏடிஸ் கொசுக்கள் பெருகும் இடங்களை அழித்தல், வீடுகளில் வளரும் கொசுக்களை அழித்தல், கொசுக் கடியைத் தவிர்த்தல், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி லார்வாக்களை அழிப்பது போன்ற துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.


Pengarang :