ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூர் பட்ஜெட் 2023ஐ நாளை மதியம் எம்பி தாக்கல் செய்ய உள்ளார்

ஷா ஆலம், நவம்பர் 24: டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நாளை பிற்பகல் சிலாங்கூர் மாநில சட்டமன்ற (டிஎன்எஸ்) அமர்வில் சிலாங்கூர் பட்ஜெட் 2023ஐ தாக்கல் செய்ய உள்ளார்.

நவம்பர் 25 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டாலும், சட்டமன்றக் கூட்டம் நேற்று தொடங்கி டிசம்பர் 6ம் தேதி வரை நடைபெற உள்ளதாக  சட்டசபை அலுவலகம் முந்தைய அறிவிப்புக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் டிவி போர்ட்டல் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். சட்டசபை கூட்டம் பற்றிய ஏதேனும் சமீபத்திய தகவல்கள் dewan.selangor.gov.my/ என்ற இணையதளம் மூலம் விளம்பரப்படுத்தப்படும்.

செய்தி அறிக்கைகளை சிலாங்கூர் கினி செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் படிக்கலாம். இது சீன, தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மூன்று பதிப்புகளிலும் வெளியிடப்படும்.


Pengarang :