ECONOMY

பொருளாதார மீட்சிக்காக சிறு திட்டங்களை மேற்கொள்ள வெ.2.8 கோடி ஒதுக்கீடு

ஷா ஆலம், நவ 26- கோவிட்-19 பெருந்தொற்று பரவலுக்குப் பின்னர்
வட்டார பொருளாதார நடவடிக்கைகளுக்குத் புத்துயிரூட்டுவதற்காக 2
கோடியே 80 லட்சம் வெள்ளி நிதியில் சிலாங்கூர பென்யாயாங் திட்டம்
அமல்படுத்தப்படவுள்ளது.

இந்நோக்கத்திற்காக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 500,000 வெள்ளி
வரை மானியம் வழங்கப்படும் என்றும் அடிப்படை வசதிகளின் பராமரிப்பு
மற்றும் தரம் உயர்த்தும் பணிகளுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை
அளிக்கப்படும் என்றும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்
திட்டத்தைத் தாக்கல் செய்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் கடந்தாண்டு 3 கோடியே
50 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் 664 திட்டங்கள்
மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர் மாநிலத்தில்
பொருளாதார நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த
சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அவர்
குறிப்பிட்டார்.


Pengarang :