ECONOMY

உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு வெகுமதி வழங்க வெ.30 லட்சம் ஒதுக்கீடு

ஷா ஆலம், நவ 26- சிலாங்கூர் உயர்கல்விக்கூட மாணவர் மாணவர் வெகுமதி திட்டத்திற்காக அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் 30 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சிலாங்கூரைச் சேர்ந்த 3,000 மாணவர்கள் பயன்பெறுவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். மாதம் 5,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி வெகுமதியாக வழங்கப்படுகிறது.

டிப்ளோமா மற்றும் இளங்கலைப் படிப்பை முதலாம் ஆண்டில் தொடரும் மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்படுகிறது என்றார் அவர். மாநிலச் சட்டமன்றத்தில் நேற்று 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்க மற்றும் தனியார் கல்விக்கூடங்களில் உயர்கல்வி பெறும் வாய்ப்பைப் பெற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் நோக்கில் கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது.


Pengarang :