ALAM SEKITAR & CUACA

பத்தாங் காளி, சுங்கை பினாங் நீர்வீழ்ச்சியில் சிறுவன் உட்பட 10 பேர் நீரில் சிக்கிக் கொண்டனர்

ஷா ஆலம், நவ 29: சுங்கை பினாங் நீர்வீழ்ச்சி, பத்தாங்காளியில் இன்று 6 சிறுவர்கள் உட்பட மொத்தம் 10 பேர் நீரில் சிக்கிக் கொண்டனர்.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் 6 முதல் 63 வயதுடையவர்கள் சம்பவ இடத்தில் சிக்கியதாக ஹரியான் மெட்ரோ தனது போர்ட்டல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) (சிலாங்கூர்) இயக்குநர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், மாலை மணி 4.36க்குத் தனது குழுவிற்கு அவசர அழைப்பு வந்தது எனத் தெரிவித்தார்.

“குவாலா குபு பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (பிபிபி) ஏழு பேர் கொண்ட குழு தேவையான கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தது.

“முதற்கட்ட அறிக்கையின்படி,  நான்கு சிறுவர்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்கிய 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார். பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக நோரசம் குறிப்பிட்டார்.

தற்போது, தீயணைப்பு வீரர்கள் ஆற்றின் மறு கரைக்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்,” என்றார்.


Pengarang :