ECONOMY

இவ்வார இறுதியில் உலு சிலாங்கூரில் மக்கள் உதவித் திட்டம் தொடர்கிறது

ஷா ஆலம், டிச 1: ஜெலஜா பென்யாயாங் சிலாங்கூர் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மக்களுக்குப் பல்வேறு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் உலு சிலாங்கூரில் தொடரும்.

15வது பொதுத் தேர்தலுக்கு (GE15) வழிவிடும் நோக்கத்திற்காக  ஒத்திவைக்கப்பட்ட மக்கள் உதவித் திட்டம், பெர்சியாரான் அஸ்-சலாம் புக்கிட் சென்டோசாவில் காலை மணி 8 முதல் மாலை மணி 5.30 வரை நடைபெறும்.

அந்நிகழ்ச்சியில் இலவச சுகாதாரப் பரிசோதனை மற்றும் பிரபலக் கலைஞர்களான சிட்டி நோர்டியானா மற்றும் பிளாக் ஹனிஃபா ஆகியோரின் படைப்புகளும் இடம்பெறும்.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் இந்நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கி வைக்கப்படும்.

15ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் இறுதியாக அக்டோபர் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் சிப்பாங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.


Pengarang :