ECONOMY

துருக்கி அதிபர் எர்டோகனின் மகன் பிலால் எர்டோகனுடன் பிரதமர் சந்திப்பு

கோலாலம்பூர், டிச 7: துருக்கி அதிபர் எர்டோகனின் மகன் பிலால் எர்டோகனைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று சந்தித்துப் பேசினார்.

இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அன்வார், பிலாலின் கோலாலம்பூர் வருகையோடு இணைந்து இந்த சந்திப்பும் நடைபெற்றதாகக் கூறினார்.

“மலேசியா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான உறவு தொடர்ந்து வலுப்பெறும்” எனக் குறிப்பிட்டு, சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பிரதமர் பதிவேற்றியுள்ளார். பிலால் எர்டோகனின் இரண்டாவது மகன் மற்றும் ஒரு தொழிலதிபர் ஆவார்.

நவம்பர் 24 அன்று 10 வது பிரதமராக அன்வார் பதவியேற்ற பிறகு அவருக்குவாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களில் எர்டோகனும் ஒருவர்.இரு தலைவர்களுக்கும் இடையே சுமார் 10 நிமிடங்கள் நீடித்த தொலைபேசிஉரையாடலில், மலேசியாவும் துருக்கியும் வர்த்தகம், வணிகம், கலாச்சாரம்,கல்வி மற்றும் ராணுவம் உள்ளிட்ட பல துறைகளில் நல்லுறவை வலுப்படுத்தமுடியும் என்று பிரதமர்  டத்தோ ஸ்ரீ அன்வார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

– பெர்னாமா


Pengarang :