ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

வரம்பு மீறிய அம்சங்கள் கொண்ட 1,126 டிக்டாக் பதிவுகள் முடக்கம்

ஷா ஆலம், டிச 8- தேர்தல் நடந்து ஒரு வாரத்திற்குப் பின்னர் வரம்பு மீறிய அம்சங்களை உள்ளடக்கிய 1,126 டிக்டாக் காணொளிகள்  டிக்டாக் செயலி நடத்துநர்களாக முடக்கப்பட்டன.

கடந்த மாதம் 12 முதல் 18ஆம் தேதி வரையிலான பொதுத்  தேர்தல் பிரசாரத்தின் போது 857 காணொளிகளும்  வாக்களிப்பு தினத்தன்று 130 காணொளிகளும் இயல்பாக முடக்கப்பட்டதாக தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

பதினைந்தவாது பொதுத் தேர்தல் தொடர்பில் சினமூட்டும் வகையிலான மற்றும் தீவிரவாதப் போக்கினைக்  கொண்டிருப்பதாக நம்பப்படும் காரணத்தால் அந்த காணொளிகள் இயல்பாக முடக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

சினமூட்டும் மற்றும் தீவிரவாத கருத்துகளை உள்ளடக்கிய தகவல்கள் பரப்பப்படுவதை தடுப்பதற்காக தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சு தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையத்தின் வாயிலாக டிக்டாக் செயலி நடத்துநர்களுடன் பேச்சு நடத்தும் என்று கடந்த 5ஆம் தேதி அமைச்சு அறிவித்திருந்தது.

நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மற்றும் முடியாட்சி, சமய, இன உணவுர்வுகளை புண்படுத்தும் வகையிலான கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஃபாஹ்மி கூறியிருந்தார்.


Pengarang :