ECONOMY

பண்டார் உத்தாமா 4 தேசிய பள்ளியில் குடில்கள் நிர்மாணிப்பு- சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா தகவல்

ஷா ஆலம், டிச 8- பண்டார் உத்தாமா தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டில் பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமா 4, தேசிய பள்ளியில் சுமார் 20,000 வெள்ளி செலவில் இரு மாணவர் ஓய்வுக் குடில்கள் மறுநிர்மாணிப்பு செய்யப்பட்டன.

இடிந்து விழும் அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் இருந்த பழையக் குடில்களுக்கு மாற்றாக புதியக் குடில்களை அமைக்கும் பணி கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முற்றுப் பெற்றதாகத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

இந்தக் குடில்களின் கட்டுமானப் பணி கடந்த மாதம் 9ஆம் தேதி
தொடங்கப்பட்டது. இதன் நிர்மாணிப்புக்குத் தேவைப்பட்ட 19,870 வெள்ளி
தொகுதியின் சிறு திட்டங்களுக்கான நிதியிலிருந்து ஒதுக்கீடு
செய்யப்பட்டது என்று அவர் சொன்னார்.

ஓய்வு நேரத்தில் மாணவர்கள் புத்தகங்களை வாசிப்பதற்கும் பாடங்களை
மீள்பார்வை செய்வதற்கும் இந்த குடில்கள் பெரிதும் உதவியாக இருக்கும்
எனத் தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார். மூங்கில்களால் கட்டப்பட்டப் பழைய குடில்களுக்குப் பதிலாக புதியக் குடில்கள் உறுதியான மரச்சட்டங்களைக் கொண்டு கட்டப்பட்டன என்றார் அவர்.


Pengarang :