ALAM SEKITAR & CUACA

வெள்ளப் பேரிடர்  மீட்புப் பயிற்சிகளைக் கிள்ளான் முனிசிபல் கவுன்சில் நடத்தியது

 ஷா ஆலம், டிச.10: வெள்ளப் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் கிள்ளான் முனிசிபல் கவுன்சில் (எம்பிகே) படகு கையாளுதல் மற்றும் நீர் மீட்பு பயிற்சியை நடத்தியது.

அந்நிகழ்வில் படகு மற்றும் என்ஜின் ஆபரேட்டர்கள், சட்ட அமலாக்கப் பிரிவினர் மற்றும் விரைவுப் படையைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டதாக முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிகழ்வில் நடத்தப்பட்ட பயிற்சிகள், தண்ணீரில் எவ்வாறு தைரியமாக இருத்தல், கயிறு வீசுதல், படகு ஓட்டுதல், படகை நிறுத்ததுதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது ஆகியவை அடங்கும்.

போர்ட் கிளாங்கில் நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அதிக அலைகள் இருக்கும் என தேசிய நீர்வரைவியல் மையம் கணித்துள்ளது.


Pengarang :