ALAM SEKITAR & CUACAECONOMY

வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஸ்ரீ மூடாவில் இரு நீர் இறைப்பு நிலையங்கள் நிறுவப்படும்

ஷா ஆலம், டிச 10- ஷா ஆலம் வெள்ளத் தடுப்பு செயல் திட்டத்தின் கீழ்
தாமான் ஸ்ரீமூடாவில் அடிப்படை வசதிகளோடு இரு வெள்ள நீர் இறைப்பு
பம்ப் நிலையங்கள் நிறுவப்படும் என்ற அடிப்படை வசதிகள் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

அவசரத் தேவைப் பிரிவில் இடம் பெற்றுள்ள இத்திட்டங்களை பெரு
வெள்ளம் மறுபடியும் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வதற்காக ஷா
ஆலம் மாநகர் மன்றம் மேற்கொள்வதாக அவர் சொன்னார்.

இன்று நடைபெறும் இத்திட்டத்தின் தொடக்க நிகழ்வைத் தொடர்ந்து
சற்றும் தாமதமின்றி நிர்மாணிப்பு பணிகள் துரித கதியில்
மேற்கொள்ளப்படும். ஆறு மாதம் முதல் ஓராண்டு காலத்தில் இத்திட்டம்
பூர்த்தியடையும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் சுசுட் எனப்படும் வெள்ளத்
தடுப்புத் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.

வெள்ளத்தைத் தடுப்பதற்கு எங்களால் இயன்ற அனைத்தையும்
செய்கிறோம். இருந்த போதிலும் இனியும் வெள்ளம் ஏற்படாது என
உத்தரவாதம் அளிக்க இயலாது. வெள்ள பாதிப்பை முடிந்த வரை குறைக்க
முயல்கிறோம் என்றார் அவர்.


Pengarang :