ANTARABANGSAECONOMYPBTSELANGOR

இஸ்தானா நெகாராவில் இன்று 27 துணையமைச்சர்கள் பதவியேற்றனர்

கோலாலம்பூர், டிச 10- துணையமைச்சர்களாக நியமிக்கப்பட்ட 27 பேர் இஸ்தானா நெகாராவில் இன்று மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இரகசிய காப்பு பிரமாணம் மற்றும் விசுவாச உறுதி மொழியை எடுத்துக் கொண்ட அவர்கள் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் மற்றும் அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஸூக்கி அலி முன்னிலையில் பதவி நியமன ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.

இன்று மாலை 3.00 மணியளவில் தொடங்கிய இந்த பதவி பிரமாணச் சடங்கில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவர் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

துணைப் பிரதமரும் கிராம மற்றும் வட்டார மேம்பாட்டுத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ அகமது ஜைட் ஹமிடி தோட்ட மற்றும் மூலத் தொழில் அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாடிலா யூசுப், தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி, ஆயுதப்படைகளின் தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ அப்பாண்டி புவாங் ஆகியோரும் உடனிருந்தனர்.

புதிய ஒற்றுமை அரசாங்கத்தின் துணை அமைச்சர்கள் பட்டியலை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் நேற்று வெளியிட்டார்.


Pengarang :