ALAM SEKITAR & CUACA

ஷா ஆலம், 12- சிலாங்கூர் மாநிலத்தில் வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறையின் (ஜே.பி எஸ்.) கட்டுப்பாட்டில் உள்ள மூன்று நதி நிலையங்களில் நீர் மட்டம் நேற்றிரவு 8.00 மணிக்கு எச்சரிக்கை அளவில் இருந்தன. ஸ்ரீ அமானில் உள்ள சுங்கை பூலோ நிலையத்தில் நீர்மட்டம் 7.38 மீட்டராகவும் (வழக்கமான அளவு 5.00 மீட்டர்), பெக்கான் மேருவில் உள்ள சுங்கை பிஞ்சாய் நிலையத்தில் 4.04 மீட்டராகவும் (வழக்கமான அளவு 2.80) கிள்ளானில் உள்ள பண்டமாரான் பி/ஏ நிலையத்தில் 2.03 மீட்டராகவும் (வழக்கமான அளவு 1.20 மீட்டர்) நீர் மட்டம் இருந்ததை https://publicinfobanjir.water.gov.my/ எனும் அகப்பக்கத் தரவுகள் காட்டுகின்றன. மேலும், கம்போங் சுங்கை செலிசெக்கில் உள்ள பெர்னாம் நதி நிலையம், ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள சிலாங்கூர் நதி நிலையம் மற்றும் கம்போங் ஜாவாவில் உள்ள கண்டிஸ் நதி நிலையம் உள்ளிட்ட ஏழு பகுதிகளும் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கிள்ளான், துகு கெரிஸில் உள்ள சுங்கை ராசாவ் நிலையம், பண்டார் கிளாங்கில் உள்ள சுங்கை கிள்ளான் நிலையம், பத்து 12 உலு லங்காட்டில் உள்ள சுங்கை லங்காட் நிலையம் மற்றும் கம்போங் சாலாக் திங்கியில் உள்ள சுங்கை லாபு நிலையம் ஆகியவை விழிப்பு நிலையில் உள்ள இதர நிலையங்களாகும். இருபத்து நான்கு மணி நேரத்திற்கு கனமழை தொடர்ந்தால் சிலாங்கூர் மாநிலத்தின் சிப்பாங், பெட்டாலிங் மற்றும் கிள்ளான் மாவட்டங்களில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என ஜே.பி.எஸ். எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஷா ஆலம், 12- சிலாங்கூர் மாநிலத்தில் வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறையின் 
(ஜே.பிஎஸ்.) கட்டுப்பாட்டில் உள்ள மூன்று நதி நிலையங்களில் நீர் மட்டம் நேற்றிரவு 
8.00 மணிக்கு எச்சரிக்கை அளவில் இருந்தன.

ஸ்ரீ அமானில் உள்ள சுங்கை பூலோ நிலையத்தில் நீர்மட்டம் 7.38 மீட்டராகவும் (வழக்கமான அளவு 5.00 மீட்டர்), பெக்கான் மேருவில் உள்ள சுங்கை பிஞ்சாய் நிலையத்தில் 
4.04 மீட்டராகவும் (வழக்கமான அளவு 2.80)  கிள்ளானில் உள்ள பண்டமாரான் பி/ஏ நிலையத்தில் 2.03 மீட்டராகவும் (வழக்கமான அளவு 1.20 மீட்டர்) நீர் மட்டம் இருந்ததை https://publicinfobanjir.water.gov.my/ எனும் அகப்பக்கத் தரவுகள் காட்டுகின்றன. 

மேலும், கம்போங் சுங்கை செலிசெக்கில் உள்ள பெர்னாம் நதி நிலையம், ரந்தாவ்  பாஞ்சாங்கில் உள்ள சிலாங்கூர் நதி நிலையம் மற்றும் கம்போங் ஜாவாவில் உள்ள 
கண்டிஸ் நதி நிலையம் உள்ளிட்ட ஏழு பகுதிகளும் விழிப்பு நிலையில் 
வைக்கப்பட்டுள்ளன.

கிள்ளான், துகு கெரிஸில் உள்ள சுங்கை ராசாவ் நிலையம், பண்டார் கிளாங்கில் உள்ள சுங்கை கிள்ளான் நிலையம், பத்து 12 உலு லங்காட்டில் உள்ள சுங்கை லங்காட் நிலையம் மற்றும் கம்போங் சாலாக் திங்கியில் உள்ள சுங்கை லாபு நிலையம் ஆகியவை விழிப்பு நிலையில் உள்ள இதர நிலையங்களாகும்.

இருபத்து நான்கு மணி நேரத்திற்கு கனமழை தொடர்ந்தால் சிலாங்கூர் மாநிலத்தின் சிப்பாங், பெட்டாலிங் மற்றும் கிள்ளான் மாவட்டங்களில்  திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என ஜே.பி.எஸ். எச்சரிக்கை விடுத்துள்ளது.

Pengarang :