ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் உள்ள சுங்கை லங்காட் அபாய அளவைக் கடந்துள்ளது

ஷா ஆலம், டிச 12: உலு லங்காட் பத்து 12 ல் உள்ள சுங்கை லங்காட் நிலையம்
நேற்றிரவு 9.45 நிலவரப்படி 42.65 மீட்டரைப் பதிவு செய்து அபாய அளவைத்
தாண்டி உள்ளது.

நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறையால் (JPS) இயக்கப்படும் நான்கு நிலையங்கள்
எச்சரிக்கை மட்டத்தில் இருப்பதை https://publicinfobanjir.water.gov.my/ யில் உள்ள
தகவல் காட்டுகிறது.

அவ்விடங்கள் கம்போங் சுங்கை செலிசெக்கில் உள்ள சுங்கை பெர்ணம் நிலையம் (26.91
மீட்டர்), ரிம்பா கெடிஆரில் உள்ள சுங்கை பெர்ணம் நிலையம் (2.20 மீட்டர்), பெக்கான்
மேருவில் உள்ள சுங்கை பிஞ்சாய் நிலையம் (4.005 மீட்டர்) மற்றும் 32 மீட்டர் அளவோடு
பெராணங் நகரில் உள்ள சுங்கை பெராணங் நிலையம்.

கூடுதலாக, ஆறு பகுதிகள் எச்சரிக்கை நிலையில் உள்ளன, அவை ரத்தாவ் பஞ்சாங்கில்
உள்ள சுங்கை சிலாங்கூர் நிலையம், கம்போங் ஜாவாவில் உள்ள சுங்கை கண்டிஸ்
நிலையம் மற்றும் தாமான் டெசா கெமுனிங் உள்ள கிள்ளான் மற்றும் சுங்கை ரசாவ்
நிலையம்

மற்ற இடங்கள் ஸ்ரீ அமானில் உள்ள சுங்கை பூலோ நிலையம், புக்கிட் சாங்காங்கில்
உள்ள சுங்கை லங்காட் நிலையம் மற்றும் கம்போங் சலாக் திங்கியில் உள்ள கோலா
லங்காட் மற்றும் சுங்கை லாபு நிலையங்கள்.


Pengarang :