NATIONAL

பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரு சிறுவர் உட்பட மூவர் காயம்

ஷா ஆலம், டிச.13: இங்குள்ள புஞ்சாக் ஆலாமில் உள்ள ஈக்கோ கிராண்டியூரில் நேற்று இரவு நடந்த ஃபன் ஃபேர் (fun fair) விளையாட்டில் இருந்து தவறி விழுந்து இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுவர் காயமடைந்தனர்.

காவல் துறைக்கு,  இரவு மணி 8.50 அளவில் நடந்த இச்சம்பவம் குறித்து தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து, அவரது குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கோலா சிலாங்கூர் மாவட்ட காவல்துறை தலைவர், சுப்ரண்டன்  ராம்லி காசா கூறினார்.

“அவர்கள் மூவரும் ‘சோடோங் ரைடு’  எனும் விளையாட்டு நகரும் போது விழுந்தனர். பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக ஷா ஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உரிமம் இல்லாமல் செயல்பட்டதற்காக சிலாங்கூர் மாநில பொழுதுபோக்கு மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் சட்டம் 1995யின் பிரிவு 6 இன் படி இவ்வழக்கு விசாரிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

– பெர்னாமா


Pengarang :