ECONOMY

வர்த்தக வழிகாட்டித் திட்டங்களைப் பி.கே.என்.எஸ். விரிவுபடுத்தும்

ஷா ஆலம், டிச 15- சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின்
(பி.கே.என்.எஸ்.) ஏற்பாட்டிலான பட்டதாரி தொழில்முனைவோர்
மேம்பாட்டுத் திட்டம் (குரோ) அடுத்தாண்டு முதல் 300,000 வெள்ளிக்கும்
மேல் வர்த்தக மதிப்பைக் கொண்ட சிறு தொழில் முனைவோருக்கும்
விரிவுபடுத்தப்படும்.

அடுத்தாண்டு தொடக்கத்தில் தொடங்கப்படவிருக்கும் இந்த குரோ பிளஸ்
திட்டத்தின் வாயிலாக அனைத்துலக நிலை வரை தயாரிப்பு பொருள்களை
சந்தைப்படுத்துவதற்கான தளங்கள் குறித்த நுட்பங்களை
பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும் என்று தொழில் முனைவோரியல்
பிரிவு தலைமை நிர்வாகி அசிலா அர்ஷாட் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் வர்த்தகத்தை
விரிவுபடுத்துவதற்குரிய ஏற்றுமதிக்கான தயார் நிலை தளத்தை
பங்கேற்பாளர்களுக்கு நாங்கள் அறிமுகப்படுத்துவோம் என அவர் மேலும்
சொன்னார்.

இந்த திட்டம் சவாமிக்கதாக விளங்குகிறது. காரணம், பொருள்களை
வெளிநாட்டுச் சந்தைகளில் பிரபலப்படுத்தும் அளவுக்கு பயிற்றுவிப்பதற்கு
ஏதுவாக சிறந்த ஐந்து பங்கேற்பாளர்களை தேர்தெடுக்க வேண்டியுள்ளது
என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :