ECONOMYSELANGOR

போக்குவரத்து குற்றங்களுக்கு 50% வரை அபராதக் கழிவு- சிலாங்கூர் போலீஸ் அறிவிப்பு

ஷா ஆலம், டிச 15- சாலைப் போக்குவரத்து குற்றங்களுக்கு விதிக்கப்பட்ட
அபராதத் தொகையில் 50 விழுக்காடு வரை கழிவு வழங்கச் சிலாங்கூர்
மாநிலல் காவல் துறை முன்வந்துள்ளது. இந்த சலுகை இம்மாதம் 20
மற்றும் 21ஆம் தேதிகளில் வழங்கப்படும்.

மாநிலத்திலுள்ள அனைத்து போக்குவரத்து போலீஸ் முகப்பிடங்களிலும்
காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த அபராதத்
தொகையை செலுத்தலாம் என்று சிலாங்கூர் மாநிலச் சாலை போக்குவரத்து
குற்றங்கள் மற்றும் அமலாக்கத் துறை அறிக்கை ஒன்றில் கூறியது.

எனினும், விபத்துகள் தொடர்பான குற்றப்பதிவுகள், அபராதம் விதிக்க
முடியாத குற்றப்பதிவுகள், ஓப்ஸ் செலாமாட் குற்றப்பதிவுகள் மற்றும்
நீதிமன்ற வழக்கிலுள்ளக் குற்றப்பதிவுகளுக்கு இந்த சலுகை பொருந்தாது
என்று அது தெளிவுபடுத்தியது.

மேலும், கனரக வாகனங்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள், ஆபத்தான
முறையில் வாகனங்களை முந்திச் சென்றது, வரிசையை முந்திச்
சென்றது, அவசரத் தடத்தைப் பயன்படுத்தியது, சாலையில் இரட்டைக்
கோடுகளில் முந்திச் சென்றது, புகைப்போக்கியை மாற்றியமைத்த து
போன்ற குற்றங்களுக்கும் அபராதச் சலுகை வழங்கப்படாது.

இந்த சலுகையைப் பயன்படுத்தி இணையம் வாயிலாகவும் அபராதத்தைச்
செலுத்த வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் அறியப்படுகிறது.

குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பவர்கள் மாநில முழுவதும் உள்ள சாலை
போக்குவரத்து முகப்பிடங்களுக்கு நேரில் சென்று குற்றப்பதிவைச்
சரிபார்த்து அபராதத் தொகையைச் செலுத்தும்படி கேட்டுக்
கொள்ளப்படுகின்றனர்.


Pengarang :