ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

கிளந்தான் மற்றும் திரங்கானுவுக்குச் சிலாங்கூர் மாநில அரசு தலா 500,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளது.

ஷா ஆலம், டிச 20: தற்போதைய வெள்ளப் பேரிடரை எதிர் கொண்டுள்ள மாநிலங்கள் கிளந்தான் மற்றும் திரங்கானுவுக்கு சிலாங்கூர் மாநில அரசு தலா 500,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளது.

#கித்தாசிலாங்கூர் 2022 வெள்ள உதவி நன்கொடை, பேரழிவால் பாதிக்கப்பட்ட வர்களின் அவலத்திற்கு அனுதாப அடையாளம் என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மக்கள் படும் துயரங்களுக்குச் சிலாங்கூர் அனுதாபம் கொள்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, கிளந்தானில் 25,353 பேரும், திராங்கானுவில் 37,021 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் (நட்மா) புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இன்று காலை 6 மணி நிலவரப்படி, கிளந்தான், திராங்கானு, பகாங், பேராக் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,415 ஆக அதிகரித்துள்ளது என்று நட்மா ட்விட்டரில் தெரிவித்தது.

ஐந்து மாநிலங்களில் மொத்தம் 458 தற்காலிகத் தங்கும் மையங்கள் (பிபிஎஸ்) திறக்கப்பட்டுள்ளன.


Pengarang :