ECONOMYSELANGOR

சிலாங்கூர் அரசின் வருடாந்திர மானியத்திற்கு ஜன.3 முதல் விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், ஜன 1- சிலாங்கூர் அரசின் வருடாந்திர மானியத்திற்கு மாநிலத்திலுள்ள ஆலயங்கள் இம்மாதம் 3ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த மானியத்திற்கான விண்ணப்பங்களை https://limas.selangor.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக சமர்ப்பிக்கலாம் என்று லீமாஸ் எனப்படும் பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தோ சமய மன்றம் கூறியது.

மானியத்திற்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் ஆலயங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதோடு கீழ்க்கண்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அது தெரிவித்தது.

– மானியத்திற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பம் மற்றும் செயலறிக்கை      – சங்கப் பதிவக சான்றிதழ்    – கணக்கறிக்கை    – நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள்/ தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள்/       கவுன்சிலர்கள்/ இந்திய சமூகத் தலைவர்களின் ஆதரவுக் கடிதம்   – ஆலய செயலவை உறுப்பினர்களின் பட்டியல்   – மலேசிய இந்து சங்கம்/மலேசிய இந்து தர்ம மாமன்ற சான்றிதழ்   – ஆலய புனரமைப்பு/விழாக்கள் மற்றும் இதர நிகழ்வுகள் தொடர்பான படங்கள் 

முஸ்லீம் அல்லாத கிறிஸ்துவ, பௌத்த, இந்து, சீக்கிய, தோ சமயங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை சிலாங்கூர் அரசு கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தி வருகிறது. 

புனரமைப்பு பணிகள், உடைபட்ட ஆலயங்களின் இடமாற்றம், புதிய ஆலய நிர்மாணிப்பு, சமயக் கல்வி நடவடிக்கை, சமயக் கல்வியை வழங்குவதற்கு உபகரணங்கள் வழங்குவது ஆகிய நோக்கங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.

இந்த மானியம் தொடர்பான மேல் விபரங்களுக்கு 03-55447306/07 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :