ALAM SEKITAR & CUACANATIONAL

திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது

கோலாலம்பூர், ஜன 13: இன்று காலை வரை பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை; இருப்பினும், திரங்கானுவில் அதிகரித்துள்ளது.

உலு திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 43 ஆக இருந்த நிலையில், தற்போது 71 பேராக அதிகரித்துள்ளது.

23 குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவரும் பாலாய் ராயா கம்போங் கெமாட்டின் தற்காலிக தங்கும் மையத்தில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் திரங்கானு மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு (ஜேபிபிஎன்) செயலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

நேற்று மாலை 6 மணி முதல் திடீரென வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியேற்றப் பட்டனர்.

தற்போது வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுவதாகவும், திரங்கானுவில் பல இடங்களில் மழை பெய்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராக் கம்பாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 91 ஆக உள்ளது.

புதன்கிழமை பிற்பகலில் பெய்த கனமழையைத் தொடர்ந்து கிராமம் சாஹோம் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள சுங்கை ரியாஸின் நீர்மட்டம் அதிகமாக உயர்ந்ததை தொடர்ந்து, திடீர் வெள்ளத்தால் கிராமத்தில் பல வீடுகள் பாதிக்கப் பட்டன.

– பெர்னாமா


Pengarang :