MEDIA STATEMENTNATIONAL

நான்கு மாநிலங்களில் வெள்ளம்- 12,000 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

கோலாலம்பூர், ஜன 27- இன்று காலை 8.00 நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள 84 துயர் துடைப்பு மையங்களில் 12,090 பேர் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

சபா மாநிலத்தில் செயல்படும் 29 துயர் துடைப்பு மையங்களில் 2,412 குடும்பங்களைச் சேர்ந்த 6,843 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை செயல்குழு கூறியது.

ஜோகூரில் நேற்றிரவு 4,575 பேராக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 3,868ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதிய மாவட்டமாக தங்காக் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகாங் மாநிலத்தின் ரொம்பின் மாவட்டத்தில் உள்ள மூன்ற துயர் துடைப்பு மையங்களில் 97 குடும்பங்களைச் சேர்ந்த 323 பேர் தங்கியுள்ளனர்.

சரவா மாநிலத்தைப் பொறுத்த வரை இரு துயர் துடைப்பு மையங்களில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் தொடர்ந்து துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.


Pengarang :