SELANGOR

கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பைப் பெறப் பூஸ்டர் டோஸைப் பெற்றுக் கொள்ளவும் – மலேசியச் சுகாதார அமைச்சு

ஷா ஆலம், பிப் 13: மலேசியச் சுகாதார அமைச்சகம் (MOH), நாட்டு மக்கள் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பைப் பெறுவதை உறுதி செய்வதற்காக பூஸ்டர் டோஸைப் பெற வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

நாடு தொற்றுநோயின் முடிவை நோக்கி நகர்ந்துள்ள போதிலும், ஆபத்தான தொற்று நோய் பரவுவதை தடுக்க முகக்கவரிகளை அணிந்து கொள்ள வேண்டும். மேலும், சுயப் பரிசோதனையை மேற்கொண்டு தொடர்ந்து கவனமாக இருக்குமாறு அமைச்சகம் அறிவுறுத்துகிறது என்று துணை அமைச்சர் லுகானிஸ்மன் அவாங் சௌனி கூறினார்.

“உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், உடனடியாக நாடு முழுவதும் உள்ள எந்த சுகாதார மையத்திற்கு சென்று சிகிச்சை பெறுங்கள்.

“பூஸ்டர் டோஸ் எடுப்பது எந்த  சுகாதார மையத்திலும் ‘வாக்-இன்’ முறை மூலம் பெற்றுக் கொள்ளலாம். அதைப் பற்றிய தகவல்களைச் சுகாதார அமைச்சகச் சமூக ஊடகங்கள் மற்றும் “MySejahtera“ மூலம் பெற்றுக் கொள்ளலாம். ,” என்று அவர் கூறினார்.

ஜனவரி 7 முதல், மாநில அரசு சிலாங்கூர் தடுப்பூசி (செல்வெக்ஸ்) திட்டத்தின் மூலம் இலவச கோவிட்-19 தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் வழங்கும் திட்டத்தைத் தொடர்கிறது.


Pengarang :