NATIONAL

ஆற்றில் மூழ்கிய சிறுவனைத் தேடும் பணியைத் தீயணைப்புத் துறை தொடர்கிறது

கோலாலம்பூர், பிப் 13- இங்குள்ள யுகே பெர்டானாவிலுள்ள கால்வாயில் தவறி விழுந்து வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனைக் கண்டு பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இடத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு மேலும் மூன்று கிலோ மீட்ட அளவுக்கு விரிவுபடுத்தியுள்ளது.

பத்து வயதான முகமது ரகுல்லா முகமது ஷாபி எனும் அந்த சிறுவனை ஸ்மார்ட் சுரங்கப் பாதை எல்லை வரை தேடிய போதிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் டத்தோ நோராஸாம் காமீஸ் கூறினார்.

அந்த கால்வாயில் நீரோட்டம் மிகவும் வேகமாக உள்ளதால் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதில் தாங்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாக அவர் சொன்னார்.

கடந்த சனிக்கிழமை அம்பாங், யுகே பெர்டானாவிலுள்ள கால்வாயில் தவறி விழுந்த வான் முகமது அமார் (வயது 8) எனும் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

இதனிடையே, கோம்பாக் சுங்கை பீசாங் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனைத் தேடும் பணி சுமார் இரண்டு கிலோ மீட்டர் சுற்றுளவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் நோராஸாம் தெரிவித்தார்.


Pengarang :