ஷா ஆலம், பிப் 24- மலேசியா மடாணி எனப்படும் நாகரீக மலேசியாவின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் இன்று தாக்கல் செய்தார். இந்த வரவு செலவுத் திட்டத்திற்காக 38 ஆயிரத்து 810 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 28,910 கோடி வெள்ளி நிர்வாகச் செலவினங்களுக்கும் 9,700 கோடி வெள்ளி மேம்பாட்டிற்கும் செலவிடப்படும்.
நாகரீக மலேசியா மேம்பாட்டு வடிவமைப்பில் முதல் நடவடிக்கையாக அமையும் இந்த 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மூன்று இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட 12 முன்னெடுப்புகளை உள்ளடக்கியுள்ளது.
முதலாவது- நீடித்த பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வது
இரண்டாவது- நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கு ஏதுவாக அமைப்புகள் மற்றும் நிர்வாக முறையில் சீர்திருத்தம் செய்வது
மூன்றாவது- பாகுபாட்டை மிதமாக்குவதற்கு சமூக நீதியை நிலைநிறுத்துதல்.