SELANGOR

கிளானா ஜெயாவில் உள்ள இரண்டு ஏரிகளில் கியாம்பங் மரங்கள், கெலாடி புன்திங் தாவரம் அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 1: கிளானா ஜெயாவில் உள்ள இரண்டு ஏரிகளில் கியாம்பங் மரங்கள் மற்றும் கெலாடி புன்திங் தாவரத்தை அகற்றும் பணியைப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

எதிர்பாராத சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் நடவடிக்கையாக க்ளோமாக் கட்டிடத்திற்கு அருகில் உள்ள ஏரி மற்றும் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி ஸ்டேடியத்திற்கு அருகிலுள்ள பண்டாரன் ஏரி ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதாக பெட்டாலிங் ஜெயா மேயர் தெரிவித்தார்

“தூரத்தில் இருந்து பார்த்தால், இரண்டு ஏரிகளும் ஓர் அழகான புதிய திடல் போல தோற்றமளிக்கின்றன, ஆனால் உண்மையில் மிகவும் ஆபத்தானவை.

“ஏரிக்கு அருகில் குழந்தைகள் விளையாடினால், எதிர்பாராத சம்பவங்கள் ஏதேனும் நடக்கும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்,” என்று முகமட் அஸான் முகமட் அமீர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

க்ளோமாக் கட்டிடத்திற்கு அருகில் உள்ள ஏரியை சுத்தம் செய்யும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மற்றொரு ஏரி கடந்த சில நாட்களுக்கு முன்பு சுத்தம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“மீன்களை ஏரியில் வீசும்போது, கூடவே இத் தாவர வகைகளும் அதில் அகற்றும் ஒரு சில தரப்பினரின் பொறுப்பற்ற அணுகுமுறையே இந்த தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குக் காரணம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

துப்புரவுப் பணிகள் நிறைவடைந்த பின்னர், பாதுகாப்பு நடவடிக்கையாக எச்சரிக்கை பலகைகள் மற்றும் மூடியப் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று முகமட் அஸான் மேலும் கூறினார்.


Pengarang :